Tuesday, October 4, 2011

பெரியாரின் 
தொண்டன்
இன்று பரம பக்தனாக 
மாறிப்போனேன்
காதலெனும்
கடவுளின் முன்னால்....!!!



Wednesday, June 29, 2011

காதல்

உள்ளத்தில் தோன்றி 
உயிரைக்குடிப்பது - காதல்..,
கண்ணசைவில் தொடங்கி 
கல்லறையில் முடிவது - காதல்...,
மனதில் தோன்றும் 
மரணத்தின் வாசல் - காதல் ...,








இழந்து விட்ட இயற்கை...

தார் சாலைகளில்
தொலைந்துவிட்ட,
தொலைதூர பயணம்...,
மண் வீதியில்
நடந்து செல்லும்
மகிழ்ச்சியினை தருமோ...!!!
 
மீன் பிடித்த
ஆற்றினிலே,
அலை இல்லா  மணல் மேடு..,
மீன்களைக்கூட
அடைத்துவிட்டோம்
கண்ணாடிப்பெட்டிக்குள்...!!
 
மரம் தரும்
நிழலடியில்
நிம்மதியாக
காற்று வாங்கிய
காலம் சென்று..,
முதுகுவலிக்கு
சாய்வு நாற்காலி தேடும்
நேரமானது.....
 
இளந்தென்றல் சுவாசித்த
இனிமையான
மாலை நேரம்..,
குளிரூட்டப்பட்ட
அறையினில் கணினியின்
முன்னே கழிகிறது...!!
 
நெற்கதிரை தழுவியபடி
வரப்பினில்
நடைபயின்ற காலம் சென்று..,
நெடுஞ்சாலை
நெரிசலில் எரிச்சலாகும்
நேரமானது....!!
 
கொக்கரிக்கும்
சேவல் சத்தம்
கேட்டேழுந்த
அதிகாலைகள் எல்லாம்..,
நச்சரிக்கும் குறுந்தகவலில்
அடங்கிப்போனது...,
 
இளைஞனே...,
இது மேலும் தொடர்ந்தால்.,
இமயமலை தவிர
இந்தியாவில் வேறெதுவும்
இராது..,
இயற்கை என்று சொல்லிக்கொள்ள....!!
 
எச்சரித்து கூறுகிறேன்..,
எழுந்திரு இந்தியா..,
இயற்கைதனை
இழந்துவிட்டு,
செயற்கைதனில்
புகுந்துவிட்ட
இயந்திர வாழ்க்கை
தேவைதானோ....!!!
 
 
 
இயற்கை ரசிகனாக உங்கள் கோபிநாத்