Sunday, April 1, 2012

உறக்கத்தின் துளிகளை
கரைத்து,
வார்த்தைகளாக
தெளிக்கிறேன்...,
கண்களில் குருதிபடிய
கவிதைகளாக கரைகிறேன்..,
பெண்ணே
உன் நெஞ்சத்தில்
எனை அறிவாய்...,
காட்சிப்பொருளாகவே
என்ன வேண்டாம்..,
இந்த அருவிக்கும்
தாகமிருப்பதை
உணர்ந்துபாரடி...!!!
சாலையோர செடியாக
புழுதி படர்ந்து
கிடக்கிறேன்..,
எனை
பூக்களாய் மாற்ற
வேண்டாம்..,
பிடுன்கியாவது எரிந்து விடு..!!
நிம்மதியாக
நித்திரையை  தேடிக்கொள்வேன்......

                                    நாகோ.......
        

Saturday, March 31, 2012

கண்ணீர் துளிகள்
சிந்தாமல் காக்கிறேன்
பெண்ணே..,
அனைத்தையும்
காதலுக்காக கரைய வைக்க...,
அழுகை என்பது
ஆறுதலின் மொழிதானோ.,
அன்பை ஏற்று
அழுத காலங்கள் எல்லாம்,
ஆறுதல் சொல்லவும்
மறுக்கின்றன ..,
உன்னிடம் பேசாத
இத்தனை நேரமும்
என் இதயத்தின்
இறுதி நாட்களை
எண்ணி கொண்டிருக்கின்றன...!!
பேச நினைக்கும்போது
ஊமையாக்கினாய்..,
சிரிக்க நினைத்தால்,
சோகத்தை பரிசளித்தாய்..,
கல்லறையை வேண்டியபோது
மட்டும் .,
கண்மூடிக்கொண்டே கரம்
காட்டுகிறாயே பெண்ணே நியாயமா...!!!

                                    ரசிகன் நாகோ...        

Sunday, February 12, 2012

கல்லறை தூக்கம்


கசந்து போன
வாழ்க்கையில்
கரைந்துவிட்டேன்...,
இனியும்
நீ எனக்கில்லை
என்றால் .,
எனது
தூக்கம் கல்லறையில்
மட்டுமே.........!!!


வைரமுத்து வரிகள்

உன்னோடு நானிருந்த 
ஒவ்வொரு 
மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் 
மறவாது கண்மணியே...!
தொண்ணூறு நிமிடங்கள் 
தொட்டணைத்த காலந்தான், 
எண்ணூறு ஆண்டுகளாய் 
இதயத்தில் கலக்குதடி..,
பார்வையிலே சில நிமிடம்,
பயத்தோடு சில நிமிடம், ,
கட்டியணைத்தபடி 
கண்ணீரில் சில நிமிடம் ,
இலக்கணமே பாராமல் 
எல்லா இடங்களில் 
முத்தங்கள் விதைத்த 
மோகத்தில் சில நிமிடம்., 

உன்னோடு நானிருந்த 
ஒவ்வொரு 
மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் 
மறவாது கண்மணியே...!

எது நியாயம், எது பாவம், 
இருவருக்கும்  தோன்றவில்லை,
அது இரவா, அது பகலா,
அதுபற்றி அறியவில்லை..,
யார் தொடங்க , யார் முடிக்க,
ஒரு வழியும் தோன்றவில்லை,
இருவருமே தொடங்கிவிட்டோம் 
இதுவரைக்கும் கேள்வியில்லை....!!
அச்சம் கலைந்தேன்,
ஆசையினை நீ அணிந்தாய்..
ஆடை கலைந்தேன்,  
வெட்கத்தை நீ  அணிந்தாய்..
கண்ட திருக்கோலம் 
கனவாக மறைந்தாலும்,
கடைசியில் அழுது 
கண்ணீர் 
கையில் இன்று முட்டுதடி...!!

உன்னோடு நானிருந்த 
ஒவ்வொரு 
மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் 
மறவாது கண்மணியே...!

                          - வைரமுத்து -